1 லட்சம் அட்வான்ஸ் புக்கிங்களை எட்டிய - BSNL டேப்லட்கள்

நண்பர்களே வணக்கம்,
 
           இந்திய மக்கள் விலை குறைவாக எதை கொடுத்தாலும் போட்டி போட்டு வாங்குவார்கள் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் வந்துள்ளது. BSNL நிறுவனம் சமிபத்தில் Tablet களை அறிமுகப்படுத்தபோவதாக செய்தி வெளியிட்டது,அந்த Tablet களை வாங்க முன்பதிவு  செய்யலாம் எனவும்  அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்த நாள்முதல் நேற்று வரை சுமார் 1 லட்சம் Tablet கள் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
 
 
தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலமாக இந்த 1 லட்சம் ப்ரீ ஆடர்களை பெற்றுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிய தொழில் நுட்பம் கொண்ட பல டேப்லட்கள் இப்போது விற்பனை சந்தையில் இடம் பெற்று வந்தாலும் , விற்பனைக்கே வராத ஒரு பொருளுக்கு நம் இந்திய மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் ஆச்சரியம் அளிப்பதாக பேன்ட்டல் டெக்னாலஜியின் மேனேஜிங் டைரக்டரான வீரேந்திர சிங் கூறியுள்ளார்.
 
உயர்ந்த தொழில் நுட்பமாக இருக்க வேண்டும் அதே சமயம் குறைந்த விலை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர். இதை மனதில் கொண்டு தம் நிறுவனம் தரமான களை தயாரித்து மக்களுக்கு கொடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.


பென்ட்டா ஐஎஸ்-701-ஆர் டேப்லட் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. தகவல்களை தெளிவாக காண இதில் 7 இஞ்ச் திரையையும் இந்த டேப்லட் வழங்கும். 3,000 எம்ஏஎச் பேட்டரியினை பெற்றுள்ள இந்த டேப்லட் விஜிஏ முகப்பு கேமராவினையும் கொடுக்கும்.

பென்ட்டா டிபேட்_டபிள்யூஎஸ்-704-சி டேப்லட்டும் 7 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இதன் மூலம் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் பெறலாம். மூன்றாவது டேப்லட்டான பென்ட்டா டிபேட் டபிள்யூஎஸ்-802-சி டேப்லட் 8 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. மற்ற 2 டேப்லட்களையும்விட இந்த டேப்லட் சற்று அதிகமான திரை வசதியை கொடுக்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.


பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 3 புதிய டேப்லட்களும் மார்ச் 5-ஆம் தேதியில் இருந்து டேப்லட் மார்கெட்களில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டேப்லட்கள் ரூ.3,250 விலையில் இருந்து ரூ12,500 விலை வரையில் கிடைக்கும்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top