" Google + விட்ஜெட் " ப்ளொக்கரில் இணைப்பது எப்படி..? ( புதிது )


நண்பர்களே, நேற்று என்னுடைய Google + வலைதளத்தை Google நிறுவனம் முடக்கி விட்டது.

" ஈரோடு தங்கதுரை " என்னும் என்னுடைய பெயர் அவர்களின் " Community Standards " க்கு ஏற்ற மாதிரி இல்லையாம்.

இதற்கு வழி காண இணையத்தில் உலவிக்கொண்டிருந்த போது கூகிள் சம்பந்தமான விட்ஜெட்டை பற்றிய தளம் ஒன்றை பார்த்தேன்.

அதில் சமிபத்திய அறிமுகமான Google + வலைதளத்தை நம்முடைய ப்ளொக்கரில் விட்ஜெட் யாக இணைக்கும் வழியை கண்டேன்,அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இணைய உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி கூகுள்+ வலைத்தளம் ஆகும்.

இதன் மூலம் மிக விரைவாக நம் நண்பர்களுடன் நாம் விரும்பும் தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும்.

மேலும் நம்முடைய கருத்தினை நம்முடைய நண்பர்களுக்கு மிகவும் எளிதில் கொண்டு சேர்க்க முடியும்.

அதற்கு முதலில் கூகிள்+விட்ஜெட் உங்களுடைய வலைப்பூ மற்றும் வலைத்தளத்தில் இணைக்க வேண்டும்.

அது எப்படி என்று பார்க்கலாம் ...

முதலில் உங்கள் Google + வலைதளத்தை ஓபன் செய்து உங்கள் Google+ ID தெரிந்து கொள்ளுங்கள்.


உங்கள் Google+ ID தெரிந்து கொள்ளும் முறை
அதன் பிறகு இங்கு நுழைந்து கொள்ளுங்கள் பின்பு, ஒவ்வொரு STEP - ஆக செய்யவும்.
இப்போது உங்களுடைய கூகுள்+ கோடினை காப்பி செய்து,வலைதளம் அல்லது வலைப்பூவில் இணைத்துக்கொள்ளவும்.

உங்கள் வலைப்பூவில் சாதாரண விட்ஜெட்டை இணைப்பது போலவே இணைத்துக்கொள்ள முடியும்.

அதற்கு உங்களுடைய பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளவும்.

பின் Dashboard > Dashboard > Page Elements > Add a Gadget > HTML/JavaScript Add என்பதை அழுத்தி கோடினை பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும்.

தற்போது உங்களுடைய வலைப்பூவில் புதிய Google+ ID விட்ஜெட் வந்திருக்கும்.

என்னுடைய ப்ளொக்கரில் " Google + விட்ஜெட் " இணைந்திருப்பதை பாருங்கள்.


இதை பயன்படுத்தி உங்கள் நண்பர்களோ,வாசகர்களோ உங்கள் கூகுள்+ல் எளிதில் சேர முடியும். மேலும் நமது வலைபூவும் அழகுபெறும்.


Thanks : widgetsplus


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top