மொபைல் போனுக்கு புத்தம் புதிய வசதி.. !


நண்பர்களே , தொலைதொடர்பு துறை நாளுக்கு நாள் அதிகம் முன்னேற்றம் அடைந்து வருவது உங்களுக்கு தெரிந்ததே. 

அதே போல செல்போன் பயன்படுத்துபவர்களும்,அவர்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன.

மொபைல் போன்களில் ஏதாவது ஒரு மாற்றம் அல்லது ஒரு வசதி வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் ஸ்மார்ட் போன் வகை செல்போன் தயாரிக்கும் ப்ளாக்பெரி நிறுவனம் தமது போனுக்கு இரண்டு அருமையான அப்பிளிகேசன்களை வெளியிட்டுள்ளது. 

முன்னணி சோசியல் நெட்வொர்க் வலைத்தனமான " Face Book " - பயன்படுத்த " Facebook for BlackBerry smartphones 2.௦ " என்ற அப்பிளிகேசனும் " BlackBerry Messenger 6.௦ " என்ற அப்பிளிகேசனும் ஆகும்.

" Facebook for BlackBerry smartphones 2.0 " - வசதிகள் :

Facebook Chat : இந்த புதிய வசதியின் மூலம் நண்பர்களுடன் சாட்டிங் செய்து கொள்ள முடியும்.

Video uploading : இந்த புதிய வசதியின் மூலம் நண்பர்களுடன் நமது வீடியோ களை பகிர்ந்து கொள்ள முடியும்.

Facebook Places : இந்த புதிய வசதியின் மூலம் நண்பர்களுடன் நமது Places & Map களை பகிர்ந்து கொள்ள முடியும்.

Facebook Events : இந்த புதிய வசதியின் மூலம் நண்பர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் போன்ற நாட்களில் நமது வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள முடியும்.


மேலும் இந்த வீடியோ - பாருங்கள் 


இது போல இன்னும் பற்பல புதிய வசதிகள் இந்த புதிய " Facebook for BlackBerry smartphones 2.0 " - அப்ளிகேசனில் உள்ளது.


" BlackBerry Messenger 6.0 " - வசதிகள் :


இன்ஸ்டன்ட் Messenger வகையை சார்ந்த இந்த " BlackBerry Messenger 6.0 " நிறைய புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளது.

Share app experiences with friends : நமது செல்போனில் இருக்கும் அப்ளிகேஷனை நமது நண்பர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம்.

Have a BBM chat within apps : நமது BBM நண்பர்களை எளிதில் கண்டு பிடிக்கவும் ,அவர்களுடன் சாட்டிங் செய்யவும் உதவுகிறது.

Audio & Video : மிகவும் எளிதாக Audio & வீடியோ களை share செய்து கொள்ள முடியும் .
இந்த இரண்டு புதிய அப்ளிகேசனை ப்ளாக்பெரி செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் " BlackBerry App World " -இல் நுழைந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் .


நண்பர்களை இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும், ஓட்டுக்களையும் தாருங்கள்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top