Apple iPhone - இப்போது விலை வெறும் Rs.3,333 மட்டுமே ... !

நண்பர்களே , செல்போன் தயாரிப்பில் பல்வேறு கம்பனிகள் இருந்தாலும், சமிபகாலமாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் " ஐ போன் " விற்பனை படு வேகமாக வளர்ந்து வருகிறது.

இதற்க்கு காரணம் வேறு எந்த செல்போன் களிலும்  இல்லாத பல்வேறு தனி சிறப்புகள் இந்த ஐ போன் க்கு உண்டு. ( அதே போல விலையும் பன்மடங்கு அதிகம் ) .

கடந்த மாதம் இந்தியாவில் ஏர்செல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் " ஐ போன் 4 "  மாடலை அறிமுகம் செய்தனர்.

அதற்க்கு கிடைத்த அமோக வரவேற்ப்பை கண்டு ஏர்செல் நிறுவனம் அடுத்த சலுகை ஒன்றை வழங்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் " ஐ போன் 3GS "  என்ற மாடலை மிகக்குறைந்த விலையில் ( Rs.19,990 )  மற்றும் தவணை முறையிலும் வழங்க உள்ளது. இந்த சிறப்பு சலுகையின் மூலம் முன்பணமாக Rs.3,333 யும் மற்றும் மாத தவணையாக அடுத்த 5 மாதங்களுக்கு Rs.3,333 யும் செலுத்த வேண்டும்.

ஆனால் இந்த சலுகை இப்பொழுது " HDFC & ICICI Bank Credit Card "  வைத்திருக்கும் வாடிக்கையாளருக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த மாத தவணை தொகைக்கு எந்த விதமான வட்டியோ அல்லது வேறு கட்டணங்களோ கிடையாது.


இது மட்டுமல்லாது ஏர்செல் வழங்கும் இரண்டு அற்புதமான " Postpaid & Prepaid " திட்டங்களோடும் இந்த " ஐ போன் " யை வாங்கலாம்.

ஒருகாலத்தில் நடுத்தர மக்களுக்கு எட்டா கனியாக இருந்து வந்த ஆப்பிள் " ஐ போன் " கள் இன்று ஏர்செல் வழங்கும் இந்த சலுகை மூலம்  கிட்டும் கனியாக மாறிவிட்டது   என்று சொல்லலாம். 


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top