ரஜினிகாந்த் பற்றி புது சர்ச்சை - விளக்கம் தாருங்கள் ..!


நண்பர்களே , இந்த பதிவை வெளிடும் முன் பலமுறை யோசித்துவிட்டு ஒரு குழப்பமான மன நிலையில்   தான் வெளியிடுகிறேன். சமிபத்தில் என் மெயில் க்கு  வந்த ஒரு செய்தியை அப்படியே தந்துள்ளேன் .

படித்துப்பாருங்கள், இது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய செய்தி .
( இந்த மெயில் உங்களுக்கும் கூட வந்திருக்கலாம் ) .


அந்த செய்தி : " மூடர்களே ..... சமீபத்தில் செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிக்கிறார், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு.

இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.

அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!!

யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.

உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை,

அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன.

உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

இதை பற்றி எழுதுங்கள் கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது.

இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம். யோசியுங்கள்........

நாட்டிலும், வீட்டிலும் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது ..... அதை போய்  கவனியுங்கள்....... இன்னமும் சினிமா மூடர்களாக இருக்காதீர்கள்  "      - இப்படி தான் வந்தது அந்த மெயில். 



ரஜினி மேல் என்ன கோவம் ? ஏன் இப்படி மிக காட்டமான வரிகள் ..? எனக்கு  புரிய வில்லை ..!  அவர் ஒரு நல்ல நடிகர் .. எல்லோருக்கும் பிடித்தமானவர் .. ஆன்மிகவாதி.. பண்பாளர் ... இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருக்காக நாம் வருத்தப்படுவதும் , அவர் நல பெற பிராத்தனைகள் செய்வதும் என்ன குற்றம் .. ? 
   
இது ஒரு பக்கம் இருக்கட்டும் , அந்த மெயில் குறிப்பிட்டுள்ள ஒரு வரிகளில் கூட பொய் இல்லை என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் தானே ....? அவர் நம்மை பொறுத்தவரை  ஒரு சினிமா நடிகர் மட்டுமே ..! அவருக்காக நாம் வேண்டுதல் இருப்பது, மண்சோறு சாப்பிடுவது, பிராணிகளை உயிர் சேதம் இடுவது, உண்ணா விரதம் இருப்பது ...   என்பதில்லாம் எந்த வகையில் சரி .. ? ? 
இப்படி இரண்டு வேறுபட்ட கருத்துகள் என் மனதில் ஓடுகின்றன. ஒரு அடிப்படை ரஜினி ரசிகனான எனக்கு எதை இப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை .

நண்பர்களே உங்கள் கருத்துகள் மூலம் தெளிவு  படுத்துங்கள்...   !  


ரஜினிகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் முன்  பேசிவிட்டு சென்றதாக வெளியிடப்பட்டுள்ள  ஆடியோவை இங்கு சென்று கேளுங்கள்..
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top