Vodafone 3G - WiFi Device - பயனுள்ள சாதனம்.. !

தொலை தொடர்பு துறையில் ஒவ்வொரு  நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே உள்ளன . அந்த வகையில் வந்திருக்கும் ஒரு பயனுள்ள பொருள் பத்தி தான் இந்த பதிவு. 

இன்று இந்தியா முழுவதும் அதிக பயன் பாட்டில் இருந்து வரும் GSM தொழில் நுட்பத்தின் புரட்சியாக , நமக்கு பல வசதிகளை தரப்போகும் 3G வசதி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.

பல செல்போன் கம்பனிகளும் போட்டி போட்டு இந்த வசதியை தர துவங்கி உள்ளனர் .  இந்த நிலையில் வோடபோன் நிறுவனம் ஒரு புதிய 3G சாதனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  








இந்த சாதனத்தின் பெயர் " Mobile Wi-Fi terminal"   பொதுவாக 3G முறையில் இன்டர்நெட் பயன்படுத்த சாதாரண டேட்டா கார்டுகளை தான் நாம்  பயன்படுத்துவோம் ,இந்த  டேட்டா கார்டுகளில் ஒரு கணினியில் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.

ஆனால் வோடபோன் அறிமுகபடுதிருக்கும் இந்த சாதனம் நம்முடைய இன்டர்நெட் வசதியை  " Wi-Fi "  முறையில் மாற்றி விடுகிறது,இதன்மூலம் நம் 3G கனைக்சனை ஒருநேரத்தில்அதிகபட்சம் 5 பேர் பயன்படுத்திக் கொள்ளமுடியும்  


மேலும் இதில் தகவல்களை  சேமிக்க " Micro SDHC (up to 32Gb) " வசதியும் தரப்பட்டு உள்ளது.

வோடபோன் 3G சேவை துவங்கியவுடன் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 2G & 3G வசதியில் இயங்கும் இந்த சாதனத்தின் விலை 5,500 வரை இருக்கும்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top