நோக்கியா வின் புதிய மாடல் - E7 - Must Read ..!

வணக்கம் அன்பு நண்பர்களே...! ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  இடைவிடாத வேலைபளுவிற்கு மத்தியில் வலைப்பூ பக்கம் வரமுடியாமல் போனது வருத்தம் தருகிறது . இனி கட்டாயம் அடிக்கடி சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை துவக்குகிறேன். 

உலகின் முன்னணி நிறுவனம் நோக்கியா தனது புத்தம் புதிய E7 மாடல் செல்போன்யை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த புதிய மாடல் பிசினஸ் கிளாஸ் வகையை சார்ந்தது. இருந்தாலும் அனைத்து தரப்பு வசதிகளையும் கொண்டு வெளிவந்திருப்பது சிறப்பாகும். மேலும் டச் ஸ்க்ரீன் வித் கி பாடு உடன் இந்த மாடல் இருப்பதும் தனி சிறப்பு
இந்த புதிய மாடலின் வசதிகளை இங்கு பார்க்கலாம்.     
நோக்கியா வின் முந்தைய மாடலான N8 மாடலில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த மாடலிலும் உண்டு. மேலும் புத்தம் புதிய வசதிகள் பலவற்றையும் உள்ளடக்கி உள்ளது. 

மேலும் இந்த மாடலில் வெப் டிவி வசதியும் இணைத்துள்ளது. இதன்மூலம் நீங்கள் CNBC TV18, CNBC Awaaz and Bloomberg - ஆகிய டிவி களை இலவசமாக பார்த்து மகிழலாம்.   இந்தியா வில் நீங்கள் இந்த மாடல் வாங்கும் போது வோடபோன் நிறுவனம் முதல் ஆறு மாதங்களுக்கு 2 GB டேட்டா இலவசமாக பயன்படுத்தி கொள்ளும் வசதியும் உண்டு. . 

மிகச்சிறந்த வசதிகள் பல உள்ள இந்த மாடலை நீங்கள் வாங்க வேண்டுமானால் விலை 29500 வரை செலவிடவேண்டும்.  

இவ்வளவு விலையில் செல்போன் வாங்க வேண்டுமா ? உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் ..  Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top