ஈரோடு ஒரு அறிமுகம்

ஈரோடு ஒரு அறிமுகம் 


                இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு  ஒரு மாநகராட்சி ஆகும். ஈரோடு விசைத்தறி தொழிலுக்கும் மஞ்சள் சாகுபடிக்கும் பெயர் பெற்றது. காங்கயம் காளைகளும் ஊத்துக்குளி வெண்ணெய்யும் தமிழ் நாடு முழுவதும் புகழ் பெற்றவை.பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும், திண்டல், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, முத்தம் பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வூரின் அமைவிடம் 11.35° N 77.73° E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது.ஜவுளிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள் ஆகியன உலகமுழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும்.

முக்கிய சுற்றுலாத்தலங்கள்


தந்தை பெரியார் நினைவிடம்

திண்டல் முருகன் கோயில்

பன்னாரி மாரியம்மன் கோயில்

பறவைகள் சரணலயம்

கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள்

தந்தை பெரியார்

சீனிவாச ராமானுஜம்

தீரன் சின்னமலை
 
நண்பர்களே, ஒரு முறை ஈரோடு வந்து பாருங்க ...... !
 
 
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top