AIRTEL - செல்போன் தயாரிப்பு & விற்பனை


இந்தியாவில் தொலைதொடர்பில் முன்னணியில் இருந்து வரும் ஏர்டெல் நிறுவனம் செல்போன் தயாரிப்பில் களம் இறங்க உள்ளது. 

இந்தியாவில் தற்போது,
Nokia,Samsung,LG,Sony,HTC,Apple,Blacberry,Motorola,Palm, போன்ற வெளிநாட்டு கம்பனிகள் செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உள்ளன. இதில் நோக்கியா கம்பெனி ரூ.1,000 முதல் ரூ.35,000  வரையிலான செல்போன்களை விற்பனை செய்து முன்னணியில் உள்ளது.

இது தவிர இந்திய கம்பனிகளான  Spice,Videocon,Onida,Lava,Maxx, Movil, Fujizone,  I-Cube,Wynncom, Olive, Fly, Oscar, GFone, AirNet, Lemon, Karbon, Mi-Fone, Intex,Zen Mobiles,Mercury,Micromax,Grapes போன்றவையும் விற்பனையில் உள்ளன.

       

இதில் சாம்சங் ,எல்.ஜி, போன்ற வெளிநாட்டு கம்பெனி களும், அனைத்து இந்திய கம்பனிகளும் " Dual Sim " வசதிகளுடனும் ஒரு சில கம்பனிகள் " Triple Sim " வசதிகளுடனும் போட்டிபோட்டு தமது விற்பனையை அதிகரித்து வருகின்றன. இதில் அனைத்து  தரப்பு மக்களிடமும் பிரசித்தி பெற்ற நோக்கியா கம்பெனி  " Dual Sim " வசதி கொண்ட செல்போன்களை இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்த போகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் தொலைதொடர்பில் முன்னணியில் இருந்து வரும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமையான "Bharti Enterprises" இன் இன்னொரு துணை நிறுவனமான "Beetel Teletech" நிறுவனத்தின் சார்பில் செல்போன்கள் விற்பனைக்கு வர உள்னன.
இந்த புதிய ரக செல்போன் கள் " 2G and 3G " வசதியுடனும்  " Dual Sim " மற்றும் " Triple Sim " வசதியுடனும் வரபோகிறது. இந்த செல்போன் களின் விலை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு  Rs. 1750 to Rs. 7000. வரை இருக்கும். மேலும் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற அனைத்து வசதிகளும் இந்த போன்களில் இருக்கும். 

குறிப்பாக " Dual SIMs - GSM + GSM or GSM+ CDMA, " Triple Sim "  - GSM + GSM+ CDMA, FM, Camera and Great Battery Life,QWERTY pad, 3G, Facebook and Nimbuzz,Mobile portal (Yahoo) Browser (Opera Mini) போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாத இறுதியில் வரையிருக்கும் இந்த செல்போன்கள் நாட்டில் பெரிய போட்டியை ஏற்படுத்தும்.
எது எப்படியோ நம்மை போன்ற மக்களுக்கு நல்ல செல்போன் கிடைத்தால் சரி.


இந்த செல்போனில் ஏர்டெல் to  ஏர்டெல்  பேசினாதானே ?  
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top