3G - விரைவில் வருகிறது. .!


இந்தியா தொலை தொடர்புத்துறையில் மிகப்பெரிய  முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் வரப்போகும் 3G பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை இங்கு பார்போம்.



அதற்கு முன்னால் இந்தியாவில் உள்ள தொலை தொடர்பு வட்டங்கள் மற்றும் இன்றைய சூழ்நிலைகள் , இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் பற்றியும்,  இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன். 


  •  இந்தியாவில் உள்ள தொலை தொடர்பு வட்டங்கள்  ( Circles in a Glance )

  • இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் ( Services Providers in India )



  • இன்றைய சூழ்நிலைகள் ( Present Scenario - Indian Telecom ) 
               



  • தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ( Technology Evolution )
1G Network: 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது. 

2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.

                     
  
2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
  
3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை  (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 3G தொழில்நுட்பத்தின் சிறப்புகள் ( Advantages of 3G டெக்னாலஜி ) 
  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2.  குரல் (Voice) மற்றும் அதி வேக தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)  Includes mobile office services such as virtual banking and online-billing, video conferencing, online entertainment and access to the Internet.

3G தொழில்நுட்பத்தின் மூலமாக நாம் பல்வேறு நன்மைகளை பெறப்போகிறோம், அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் கொடுத்துள்ளேன்.

1. Video Calling சேவை :  

Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும்

2. அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband):

3G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும்.



 இதர வசதிகள் :

1. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.


2. வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.

3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் 3G தொழில்நுட்பம்
மேலை நாடுகளில் பயன்படுத்திவரும் இந்த வசதியை நாம் விரைவில் இந்தியாவிலும் பயன்படுத்த இருக்கிறோம்.

இந்தியாவில் May-19. 2010 முடிவடைந்த ஏலத்தில், தொலை தொடர்புத்துறையில் முன்னணியில் இருக்கும்  7 நிறுவனங்கள் மிக அதிக விலையாக  Rs 67,719 crore கொடுத்து உரிமையை பெற்றுள்ளன. 
இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் உள்ள ஏர்செல், ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ், ஐடியா , டாட்டா , எஸ் டெல் ஆகிய செல்பேசி நிறுவனங்கள் 3G சேவையை வழங்க போகின்றன . 
நம்ம சைனா செட்ல இதெல்லாம் வருமான்னு தெரியலையே ?
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top